நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பாலஸ்தீனியர்களுக்கு உதவ கூடுதலாக 100 மில்லியன் ரிங்கிட் நிதி: பிரதமர் அறிவிப்பு

கோலாலம்பூர்:

பாலஸ்தீனிய மக்களுக்கு உதவ கூடுதலாக 100 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்படுகிறது.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.

பாலஸ்தீன மக்களுக்கு, குறிப்பாக காசாவில் உள்ளவர்களுக்கு உதவுவதற்காக கூடுதலாக இந்த நிதி ஒதுக்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசாங்கம் அறிவித்த 100 மில்லியன் ரிங்கிட் நிதிக்கு கூடுதலாக இந்த ஒதுக்கீடு உள்ளது.

நான் எங்கு சென்றாலும், என் பாலஸ்தீன சகோதரர்களை நான் ஒருபோதும் விட்டுச் செல்வதில்லை.

ஆக இந்த நிதி பாலஸ்தீன மக்களுக்கு பெரும் உதவியாக இருக்கும்.

குறிப்பாக பாலஸ்தீன மக்களுக்கு மலேசியா என்றுமே துணை நிற்கும்  என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset