நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

காசாவுக்கு ஆதரவாக மலேசியா பேரணியில் பிரதமர் கலந்து கொண்டார்

கோலாலம்பூர்:

காசாவுக்கு ஆதரவாக மலேசியா எனும் பேரணியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

காசாவுக்கு ஆதரவாக மலேசியா எனும் மாபெரும் பேரணியில் நிகழ்வு நேற்று இரவு டத்தாரான் மெர்டேகாவில்  நடைபெற்றது.

இந்த பேரணியில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.

இரவு 9.06 மணிக்கு பிரதமர் டத்தாரான் மெர்டேகா வந்தடைந்தார்.

பிரதமர் துறையின் சமய விவகாரங்களுக்கான அமைச்சர் டத்தோ டாக்டர் முஹம்மத் நயீம் மொக்தார், சுமுட் சுசாந்தாராவின் இயக்குநர் முஹம்மது நாதிர் அல்-நூரி கமருஸமான் ஆகியோரும் பிரதமருடன் வந்தனர்.

தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில், பிரதமர் துறையின் கூட்டரசுப் பிரதேச  அமைச்சர்  டத்தோஸ்ரீ டாக்டர் ஜலேஹா முஸ்தஃபா, அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபுபக்கர் ஆகியோரும் உடன் இருந்தனர்.

இந்த பேரணியில் 20,000த்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset