நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கல்விப் புரட்சி ஏற்படுத்தி வரும் இளம் கல்வி அமைச்சர் சாரா அல் அமீரி

துபாய்:

சாரா அல் அமீரி. வயது 38 அரபுலகின் இளம் கல்வி அமைச்சர்

ஆண்டு விடுமுறை முடிந்து 2025-26
கல்வியாண்டுக்கு பள்ளிக்கூடங்கள் 
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும்
இன்று ஆகஸ்ட் 25ந் தேதி திறக்கப்படுகிறது. விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கிறது என்பதால் திரும்பி சென்று வருகின்றனர்.

அனைத்து துறைகளிலும் முன்னிலை வகிக்கும் அமீரகத்தின் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதில் யுஏஇ ஆட்சியாளர்கள் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர்.  
கடந்த ஆண்டு கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற சாரா அல் அமீரி ஆரம்ப கல்வியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார்.

அனைத்து துவக்கப்பள்ளிகளிலும் 
தாய்மொழிக் கல்வி ஊக்குவிக்க 
அரபு மொழி கற்பித்தல் கட்டாயமாக உத்தரவு பிறப்பித்துள்ள சாரா அல் அமீரி ஆரம்பக் கல்வி நிலையிலேயே முஸ்லிம் மாணவர்களுக்கு Islamic Studies பாடத்தையும் பயிற்றுவிக்க அறிவுறுத்தியுள்ளார்.

ஆரம்பக் கல்வி நிலையங்கள் இல்லாத பகுதிகள் கண்டறியப்பட்டு புதிதாக 350பள்ளிக்கூடம் திறப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

இன்று கல்வி நிலையங்கள் மீண்டும் திறப்பதை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
வழக்கமான பாதுகாப்பு பணியிலுள்ள ரோந்து வாகனங்களுடன் 250 சிறப்பு பிரிவு வாகனங்கள் பள்ளிக்கூட பகுதியில் கண்காணிக்கவும், 9 டிரோன் கேமரா பொருத்திய அதிநவீன வசதிகளுடன் கூடிய ரோந்து வாகனங்களும், 
குதிரை படையின் 4 பிரிவினரும் 
சைக்கிள் ரோந்து படையின் 60பிரிவினரும் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று 25ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறப்பதை முன்னிட்டு அமீரகம் முழுவதும் Zero Accident தினமாக அறிவித்துள்ள UAE உள்துறை அமைச்சகம் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளனர்.

கணினி பொறியியல் வல்லுநரான 
ஸாரா அல் அமீரி கல்வி அமைச்சர் பொறுப்பு ஏற்பதற்கு முன் 2017ல்
ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவியல் தொழில்நுட்ப மையம் இயக்குநராக பதவி வகித்தவர்.

Emirates Mars Mission திட்டத்தை வடிவமைத்த குழுவுக்கு தலைமை தாங்கி விண்வெளிக்கு அமீரக செயற்கை கோள் அனுப்பும் திட்டம் வெற்றிகரமாக உழைத்த இளம் அரபுப்பெண் சாதனையாளர்.

- குளச்சல் அஜீம்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset