நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காலையில் தடங்கலை சந்தித்த சிங்கப்பூர் டௌன்டவுன் (Downtown) பாதையில் ரயில் சேவைகள் வழக்க நிலைக்கு திரும்பின 

சிங்கப்பூர்: 

சிங்கப்பூர் டௌன்டவுன் (Downtown) பாதையில் ரயில் சேவைகள் முழுமையாக வழக்கநிலைக்குத் திரும்பியுள்ளன.

ரயில் பாதையில் ஏற்பட்டிருந்த சமிக்ஞை தொடர்பிலான தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்டுள்ளது.

இலவசப் பேருந்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

அது குறித்து SBS Transit நிறுவனம் அதன் Facebook பக்கத்தில் பதிவிட்டிருந்தது.

இதற்கு முன்னர் புக்கிட் பாஞ்சாங்கிற்கும் (Bukit Panjang) பியூட்டி வோர்ல்ட்டிற்கும் (Beauty World) இடையிலான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டிருந்தன.

ஏற்பட்ட சிரமத்திற்கு SBS Transit பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டது.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset