நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிரம்ப்பின் வரி விதிப்பு சட்ட விரோதம்: அமரிக்க நீதிமன்றம்

 வாஷிங்டன்:

பல நாடுகளுக்கு வர்த்தக வரி விதிக்க அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் நடவடிக்கை சட்ட விரோதம் என்று அந்நாட்டு மேல்முறையீட்டு தீர்ப்பாயம்  உத்தரவிட்டது.

உலகிலேயே அதிகபடியான வரியாக 50 சதவீதத்தை இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா விதித்துள்ளது. இதுபோன்று பல்வேறு நாடுகளுக்கு வரிகளை டிரம்ப் விதித்துள்ளார். இதற்கு சீனா, இந்தியா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

டிரம்ப்பின் இந்த நடவடிக்கை தொடர்பான வழக்கில் வாஷிங்டனில் உள்ள மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அளித்த உத்தரவில், அமெரிக்காவில் தேசிய அவசரநிலைகளை அறிவிக்கவும், இறக்குமதி வரிகளை விதிக்கவும் அதிபர் டிரம்ப்புக்கு சட்டபூர்வ உரிமையில்லை என்று தெரிவித்தது.

புதிய வரிகளை மேல்முறையீட்டு தீர்ப்பாய நீதிமன்றம் ரத்து செய்யவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் அந்நாட்டு அரசுக்கு அந்த நீதிமன்றம் அனுமதியளித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset