நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இந்தோனேசியா கலவரம்: சீனப் பயணத்தை பிரபோவோ ரத்து செய்தார்

ஜாகர்த்தா:

நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களுக்கு பரவிய போராட்ட அலையைத் தொடர்ந்து, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ சீனாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தை ரத்து செய்தார்.

அதிபரின் செய்தித் தொடர்பாளர் பிரசெட்யோ ஹாடியின் கூற்றுப்படி, 

நாட்டில் பாதுகாப்பு நெருக்கடியை பிரபோவோ தொடர்ந்து நேரடியாகக் கண்காணித்து நெருக்கடி தீர்வு முயற்சிகளுக்கு தலைமை தாங்க முடியும் என்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டது.

சீன அரசாங்கத்திற்கு உரிய மரியாதை, மன்னிப்புடன் அதிபர் பிரபோவோ அழைப்பில் கலந்து கொள்ள முடியவில்லை என்று சனிக்கிழமை ஒரு வீடியோ அறிக்கையில் அவர் தெரிவித்தார்.

இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த 80ஆவது ஆண்டு நிறைவையொட்டி, 

செப்டம்பர் 3 ஆம் தேதி பெய்ஜிங்கில் நடைபெறும் வெற்றி நாள் அணிவகுப்பில் பங்கேற்பது இந்த பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset