நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

தாய்லாந்துப் பிரதமர் பெய்டோங்டார்ன் பதவி நீக்கம்: அரசிலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு

பேங்காக்:

 தாய்லாந்து அரசிலமைப்பு நீதிமன்றம் இடைக்காலமாக பதவி நீக்கம் செய்யப்பட்ட அந்நாட்டுப் பிரதமர் பெய்டோங்டார்னை நிரந்தரமாக பதவியில் இருந்து நீக்கியுள்ளது.

கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையில் அவர் நெறிமுறை தவறி நடந்துகொண்டதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறியது.

நீதிமன்றத்தின் இந்த முடிவு பிரதமரின் கூட்டணி அரசுக்கும் அந்நாட்டின் முக்கிய அரசியல் குடும்பத்திற்கும் ஒரு பேரடி என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தாய்லாந்துப் பிரதமர் பெய்டோங்டார்ன் ஷினவாத் கம்போடியாவுடனான நாட்டின் எல்லைப் பிரச்சினையை கையாண்ட விதத்துக்காக அவர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும் பெரும் செல்வந்தருமான தக்சின் ஷினவாத்தின் புதல்வி பெய்டோங்டார்ன். 

அவர் ஜூன் மாதம் கம்போடியாவுடனான எல்லைப் பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் அந்நாட்டின் முன்னாள் பிரதமரான ஹுன் சென்னுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார். 

அந்த உரையாடல் பதிவு செய்யப்பட்டு வெளியான நிலையில் அதில் அவர் நாட்டை விட்டுக்கொடுத்துப் பேசியதாக அவர் மீது புகார் எழுந்தது.

தாய்லாந்தில் ஏற்கெனவே ஓராண்டுக்கு முன்னர் அரசிலமைப்பு நீதிமன்றத்தால் அந்நாட்டுப் பிரதமர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 

இந்நிலையில் பெய்டோங்டார்னையும் பதவியிலிருந்து நீக்கினால் நாட்டின் தற்போதைய நிலையில் பிரதமர் வேட்பாளராக எவரையும் குறிப்பிட முடியாத சூழல் இருப்பதாகக் கூறப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset