நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சில சலுகைகள் ரத்து: இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ

ஜகார்தா:

இந்தோனேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சில சலுகைகள் ரத்து செய்யப்படும் என்று அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கூறியிருக்கிறார்.

அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் உச்சத்தை எட்டியிருக்கும் வேளையில் அவர் அரச மாளிகையிலிருந்து நேரடியாக உரையாற்றினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கூடுதல் சம்பளமும் படித்தொகையும் வழங்குவதை எதிர்த்து மக்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்.

இதுவரை ஐவர் மாண்டனர்.

பொதுமக்களின் கோபத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது என்றும் அவர்களது கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்றும் என்றும் திரு பிரபோவோ கூறினார்.

குற்றம் புரியும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவியிலிருந்து நீக்கப்படுவர் என்று அவர் குறிப்பிட்டார்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset