நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தானுக்கு வெள்ள முன்னெச்சரிக்கையை அளித்த இந்தியா

புது டெல்லி:

ஜம்முவில் இருந்து வெள்ள அபாயம் ஏற்படும் என்று பாகிஸ்தானுக்கு இந்தியா முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது.

ஆபரேசன் சிந்தூருக்கு பிறகு இந்தியா -  பாகிஸ்தானுக்கு இடையே எந்தவித தகவல் பரிமாற்றமும் இல்லாமல் இருந்தது.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் இதுபோன்ற வெள்ள அபாயத் தகவல் பகிரப்படும். இந்த ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்து விட்டபோதிலும் இந்தக் தகவலை மனிதாபிமான அடிப்படையில் அளித்துள்ளது.

இமயமலையில் உற்பத்தியாகும் தாவி நதி ஜம்மு பிராந்தியத்தை கடந்து, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்துக்குள் பாய்ந்து செனாப் நதியுடன் சங்கமிக்கிறது.

இதில் வெள்ள ஏற்பட்டுள்ளதாக பாகிஸ்தானுக்கு இந்தியா தகவல் அளித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset