
செய்திகள் உலகம்
ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன அதிபருக்கு அனுமதி மறுப்பு
வாஷிங்டன்:
நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அந்தக் கூட்டத்தில் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து அளிக்க பிரான்ஸ், கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடுகள் முடிவு செய்துள்ளதால், அதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீன விடுதலை அமைப்பு மற்றும் பாலஸ்தீன ஆணையத்தைச் சேர்ந்த மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட 80 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அமைதி முயற்சிகளை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக அமெரிக்கா கருதுகிறது என்று வெள்ளை மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலும், பாலஸ்தீனமும் தனித் தனி சுதந்திர நாடுகளாக அங்கீகரித்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதே இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு என இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில் இஸ்ரேல் நடத்தி வரும் மனிதாபிமானமற்ற காஸா தாக்குதலை கண்டித்து ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கவிருப்பதாக பிரான்ஸ் கடந்த மே மாதம் அறிவித்தது.
அதைத் தொடர்ந்து, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஆண்டோரா, பின்லாந்து, லக்ஸம்பர்க், போர்ச்சுகல், சான் மரினோ, ஐஸ்லாந்து, அயர்லாந்து, மால்டா, நோர்வே, ஸ்லோவேனியா, ஸ்பெயின் ஆகிய 15 நாடுகள் இதற்கு ஆதரவு தெரிவித்து கூட்டறிக்கை வெளியிட்டன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 31, 2025, 8:48 pm
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் சில சலுகைகள் ரத்து: இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ
August 31, 2025, 7:13 pm
டிரம்ப்பின் வரி விதிப்பு சட்ட விரோதம்: அமரிக்க நீதிமன்றம்
August 31, 2025, 2:34 pm
இந்தோனேசியா கலவரம்: சீனப் பயணத்தை பிரபோவோ ரத்து செய்தார்
August 29, 2025, 6:26 pm
தாய்லாந்துப் பிரதமர் பெய்டோங்டார்ன் பதவி நீக்கம்: அரசிலமைப்பு நீதிமன்றம் தீர்ப்பு
August 28, 2025, 11:28 am
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு - 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்: கொலையாளி தற்கொலை
August 27, 2025, 3:01 pm
பாகிஸ்தானுக்கு வெள்ள முன்னெச்சரிக்கையை அளித்த இந்தியா
August 25, 2025, 8:18 pm