நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாகிஸ்தான் மன்னிப்பு கோர வங்கதேச மாணவர் அமைப்பு கோரிக்கை

டாக்கா: 

1971 விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் நடத்திய இனப் படுகொலைக்கு மன்னிப்பு கோர வேண்டும் என்று அந்நாட்டு மாணவர் அமைப்பினர் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தாருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
வங்கதேசத்துக்கு தார் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

டாக்கா வந்த அவரை முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) மற்றும் ஜமாஅத் இ இஸ்லாமி ஆகியவற்றின் தலைவர்களை சந்தித்துப் பேசினர்.

இருதரப்பு உறவு மேம்பட வேண்டுமானால், இனப் படுகொலைக்கு  அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று அவரை சந்தித்த வங்கதேச மாணவர்களின் தேசிய குடிமக்கள் கட்சி வலியுறுத்தினர்.

இதுதொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜமாத் இ இஸ்லாமி கட்சித் தலைவர் அப்துல்லாஹ் முஹம்மது தாஹீர், இது இரு அரசுகளும் விவாதிக்க வேண்டிய விஷயம் என தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset