நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வியூகங்களை வகுக்க டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், மத்திய செயலவையினருக்கு முழு அங்கீகாரம்: டத்தோ சங்கர் ஐயங்கர்

பண்டார் சௌஜானா புத்ரா:

வரும் பொதுத் தேர்தலை எதிர்கொள்ள வியூகங்களை வகுக்க மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், மத்திய செயலவையினருக்கு முழு அங்கீகாரம்  வழங்குகிறோம்.

சிலாங்கூர் மாநில மஇகா தலைவர் டத்தோ சங்கர் ஐயங்கர் இதனை கூறினார்.

வரும் பொதுத்தேர்தலை எதிர்கொள்ள சலக யுக்திகளையும் வியூகங்களையும் வகுத்து செயல்படுத்தவும் மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், மத்திய செயலவையினருக்கு முழு அங்கீகாரம் வழங்கும் தீர்மானத்தை சிலாங்கூர் மாநில மஇகா இன்று நிறைவேற்றியது.

அதே வேளையில் டான்ஸ்ரீ விக்னேஸ்வரன், துணை தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன், மத்திய செயலவைக்கு முழு ஆதரவையும் சிலாங்கூர் மாநில மஇகா வழங்கியது.

மேலும் நாட்டில் உள்ள இந்து கோவில்களின் பாதுகாப்பை உறுதி செய்வத்தோடு மட்டுமல்லாமல் மலேசிய இந்தியர்களின் அடிப்படை உரிமைகள் மதிக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

குறைந்த மாணவர்களை கொண்டிருக்கும் தமிழ்ப் பள்ளிகளை மூடப்படுவதை தடுக்கும் வகையில் அவற்றின் உரிமங்களை இந்தியர்கள் அதிகம் வாழும் இடங்களில் இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

சிலாங்கூர் மாநிலத்தில் 50க்கும் குறைவான மாணவர்கள் கொண்ட தமிழ்ப்பள்ளிகள் அதிகம் உள்ளது.

இந்த பள்ளிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்று டத்தோ சங்கர் ஐயங்கர் தமது உரையில் சுட்டிக் காட்டினார்.
 
இடைநிலை பள்ளிகளில் போதுமான தமிழ்ப் பள்ளி மாணவர்கள் இருப்பின் அவர்கள் தமிழை ஒரு கட்டாய பாடமாக எடுக்க தமிழ் ஆசிரியர்கள் அந்த பள்ளிகளில் நியமிக்க வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset