நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அன்று மஇகாவை திட்டி அரசியல் நடத்தியவர்கள் இன்று ஊமையாகி விட்டனர்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்

பண்டார் சௌஜானா புத்ரா:

அன்று மஇகாவை திட்டி அரசியல் நடத்தியவர்கள் இன்று ஊமையாகி விட்டனர். மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இவ்வாறு சாடினார்.

கடந்த 50 ஆண்டுகளாக ம இகாவை பற்றி கண்டப்படி திட்டினார்கள்.

காலையில் எழுந்தவுடன் எதிர்கட்சியில் இருந்த பல இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் திட்டிக் கொண்டே இருந்தார்கள்.

காலையில் திட்டுவார்கள் பின்னர் மாலையிலும் திட்டுவார்கள்.
நல்ல திண்ணுட்டு தூங்க போய் விடுவார்கள்.

மறுநாள் காலையில் மஇகா திட்டுவதை தொடங்கி விடுவார்கள்.  இன்று அரசாங்கத்தில் அவர்கள் இருக்கிறார்கள். ஆனால் வாயை திறப்பதில்லை .

ஆனால் ம இகா அப்படி இல்லை. இந்திய சமுதாயத்திற்காக இன்னமும் போராடி கொண்டிருக்கும் கட்சி என்று அவர் கூறினார்.

இன்று அரசாங்கத்தில் எந்தவொரு பதவியும் எங்களுக்கு இல்லை. ஆனால் ம இகா இன்னமும் இந்திய சமுதாயத்தின் மீது அக்கறையும் பாசமும் கொண்டு சேவையாற்றி வருகிறது.

கோலாலம்பூர் அருள்மிகு மகா மாரியம்மன் கோவிலில் உருவான ஒரு கட்சி ம இகா என்பதை யாரும் மறந்து விடாதீர்கள்.

இந்திய சமுதாயத்தை சேர்ந்த உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இன்னமும் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம் உபகாரம் சம்பளம் வழங்கி வருகிறது என்றார் அவர்.

இன்று சிலாங்கூர் மாநில மஇகா மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்த உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்தார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset