நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியாவில் வெளிநாட்டு முகவர்களின் நடமாட்டத்தை போலிசார் கண்காணித்து வருகின்றனர்: ஃபஹ்மி

கோலாலம்பூர்:

மலேசியாவில் வெளிநாட்டு முகவர்களின் நடமாட்டத்தை போலிசார் கண்காணித்து வருகின்றனர். தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.

நாட்டில் வெளிநாட்டு முகவர்களின் செயல்பாடு அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பில் அரசாங்கம் சமரசம் செய்யாது.

சம்பந்தப்பட்ட முகவர்களின் நடமாட்டத்தை போலிசார் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.

பாலஸ்தீனப் பிரச்சினையை ஆதரிப்பதில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், அரசாங்கம் மௌனம் காத்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டு முகவர்களின் நடமாட்டம் அதிகரிப்பதை தேசிய போலிஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மத்  காலித் இஸ்மாயில் சமீபத்தில் உறுதிப்படுத்தினார் என்றார் ஃபஹ்மி.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset