நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சிகாமட்டைத் தொடர்ந்து குளுவாங்கில் இரண்டாவது நிலநடுக்கம்

ஜொகூர்பாரு:

ஜொகூர் சிகாமட்டைத் தொடர்ந்து குளுவாங்கில் இரண்டாவது நிலநடுக்கம் சம்பவம் பதிவாகியுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட் மலேசியா) இதனை தெரிவித்தது.

ஜொகூரில் உள்ள குளுவாங்கில் இன்று காலை 9 மணியளவில் 2.8 ரிக்டர் அளவிலான மற்றொரு பலவீனமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இன்று அதிகாலை சிகாமட் அருகே முதல் சம்பவம் நிகழ்ந்த மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, 

ஜொகூரில் இன்று கண்டறியப்பட்ட இரண்டாவது நில அதிர்வு நிகழ்வு இதுவாகும்.

நிலநடுக்கம் 2.2 ரிக்டர் வடக்கிலும் 103.1 டிகிரி கிழக்கிலும் மையம் கொண்டிருந்தது.

இது குளுவாங்கிலிருந்து வடமேற்கே சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.

ஜொகூர், நெகிரி செம்பிலான், மலாக்கா, தெற்கு பகாங்கில் பல பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெட்மலேசியா அவ்வப்போது நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகக் கூறியது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset