நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெர்டேக்காவிற்காக ஆகஸ்ட் 26-31 தேதிகளில் KLIA வான்வெளி மூடப்படுகிறது: மலேசியா ஏர்லைன்ஸ் விமான நேரங்களை மறுசீரமைப்பதால் பயணிகள் 4 மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையம் வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

கோலாலம்பூர்:

மலேசியாவின் 68ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றியுள்ள தற்காலிக வான்வெளி மூடப்படுகிறது. ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை மலேசிய ஏர்லைன்ஸ் தனது விமானங்களை அட்டவணைப்படி மீண்டும் இயக்கும்.

ஆறு நாள் காலகட்டத்தில் தினமும் காலை 8 மணி முதல் நண்பகல் வரை வான்வெளி மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.   

மலேசிய ஏர்லைன்ஸின் இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, திருத்தப்பட்ட விமான அட்டவணை கேஎல்ஐஏவிலிருந்து புறப்படும், வருகை அளிக்கும் சேவைகளின் நேரங்கள் மாற்றி அமைக்கப்படுகிறது.

“கேஎல்ஐஏவில் புறப்படும் பயணிகள், பல்வேறு டச் பாயிண்டுகளில் செக்-இன் நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணச் சரிபார்ப்புகளுக்கு போதுமான நேரத்தை அனுமதிக்க, தங்கள் மறு திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்திற்கு நான்கு (4) மணி நேரத்திற்கு முன்னதாக விமான நிலையத்திற்கு வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset