நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மெட்ரிகுலேசன் மாணவர் சேர்க்கை தொடர்பாக கல்வியமைச்சர் ஃபட்லினா பதிலளிக்க வேண்டும்: இராமசாமி

கோலாலம்பூர்:

மெட்ரிகுலேசன் மாணவர் சேர்க்கை தொடர்பாக  கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் பதிலளிக்க வேண்டும்.

உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி இதனை கூறினார்.

மிகுந்த விருப்பத்துடன் எதிர்பார்க்கப்படும் மெட்ரிகுலேஷன்  இந்திய மாணவர்களின் சேர்க்கையைச் சார்ந்த சில கேள்விகளை கல்வி அமைச்சரான ஃபட்லினா சிடேக்கைக் கேட்க விரும்புகிறேன். 

சமீபத்தில் 2025ஆம் ஆண்டுக்கான இந்திய மாணவர் சேர்க்கை 1,537 என அவர் குறிப்பிட்டார்.

இது அவர்களுக்கான ஒதுக்கீட்டை மிகவும் மீறியுள்ளதாகக் கூறினார்.

ஃபட்லினா பின்வரும் கேள்விகளுக்குப் பதில் அளிக்க முடியுமா?

1. சீன, இந்திய மாணவர்களின் மொத்த சேர்க்கை எண்ணிக்கை என்ன?

2. சீன மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை என்ன?

3. 2025ஆம் ஆண்டில் மெட்ரிகுலேஷன் கல்வியில் சேர்க்கப்பட்ட மலாய், சீன, இந்திய மற்றும் பிற மாணவர்களின் மொத்த எண்ணிக்கை என்ன?

4. 2025ஆம் ஆண்டு இந்திய மாணவர்களின் சேர்க்கை அவர்களுக்கான ஒதுக்கீட்டை மீறியதாக இருந்தால், இந்திய மற்றும் சீன மாணவர்களுக்கான உண்மையான ஒதுக்கீடு எவ்வளவு?

5. கடந்த பத்து ஆண்டுகளாக மாணவர் சேர்க்கையின் பிரிவுவாரியான (breakdown) விவரங்களைப் ஃபாட்லினா அளிக்க முடியுமா?

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் ஆட்சியில் இந்திய மாணவர்களின் சேர்க்கை சுமார் 2,500 ஆக இருந்த்தாக சொல்லப்படுகிறது.

 அப்படியானால், அந்நேரத்தில் இந்தியர்கள் தங்களுக்கான ஒதுக்கீட்டை மீறியதாகச் சொல்லப்படலாம். இந்நிலையில், இந்த ஆண்டு இந்திய மாணவர்களின் சேர்க்கை ஒதுக்கீட்டை மீறியது என்று ஃபட்லினா எந்த அடிப்படையில் கூறுகிறார்?

மலாய், சீன, இந்திய மாணவர்களுக்கான 90:10 விகித ஒதுக்கீட்டைப் பற்றிப் பேசப்பட்டாலும் அது மர்மமும் அரசியலுடனும் சூழப்பட்டுள்ளது. 

சீன, இந்திய மாணவர்களுக்கான ஒதுக்கீட்டினைத் தவிர, சேர்க்கை அளவுகோல் தானே தெளிவற்றதாக உள்ளது.

ஆக கல்வியமைச்சர் ஃபட்லினா இதற்கு முழு விளக்கமளிக்க வேண்டும் என்று இராமசாமி கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset