நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் சிகாமட்டில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது

ஜொகூர்பாரு:

ஜொகூர் சிகாமட்டில் இன்று காலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது.

ஜொகூர் மந்திரி புசார் டத்தோ ஒன் ஹஃபிஸ் காசி இன்று காலை 6.13 மணிக்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவித்தார்.

4.1 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

மேலும் ஜொகூர் அரசாங்கம் பொதுமக்கள் நிலையற்ற கட்டமைப்புகளிலிருந்து விலகி இருக்கவும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களுக்கு எப்போதும் உணர்திறன் உடையவர்களாக இருக்கவும் அறிவுறுத்துகிறது என்று அவர் கூறினார்.

இதனிடையே இதுவரை எந்த உயிரிழப்புகளோ அல்லது சொத்து சேதமோ ஏற்படவில்லை.

சிகாமட் மாவட்ட அதிகாரி முஹம்மத் எஸ்சுதீன் சனுசியைத் தொடர்பு கொண்ட போது அவர் இதனை உறுதிப்படுத்தியதாக ஒன் ஹபிஸ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset