நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிகரெட் இல்லாத நாடு

அஷ்காபாத்

துர்க்மெனிஸ்தான் இந்த ஆண்டு (2025) இறுதிக்குள் புகைபிடிக்கும் பழக்கத்தை முற்றிலும் ஒழித்துக் கட்ட முயல்கிறது.

7 மில்லியன் மக்கள்தொகை கொண்ட அந்த நாட்டில் புகைபிடிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

சுமார் 4 விழுக்காட்டினர் மட்டுமே அங்கு புகைக்கும் பழக்கத்தைக் கொண்டிருப்பதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறுகிறது.

சிகரெட் மீது கடுமையான வரிகளும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான பொது இடங்களில் புகைபிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

துர்க்மெனிஸ்தானில் சிகரெட்டுகளின் விலையும் மிகவும் அதிகம்.

ஒரு சிகரெட் பொட்டலம் 14.20 டாலர் முதல் 48.50 டாலருக்கு வரை விற்கப்படுகிறது.

புகைபிடித்து மாட்டிக்கொள்வோருக்கு அபராதங்கள் விதிக்கப்படுகின்றன.

நாட்டின் தலைவர் குர்பங்குலி பெர்டிமுகமெடோவ்
(Gurbanguly Berdymukhamedov), இந்த ஆண்டு இறுதிக்குள் புகைக்கும் பழக்கம் முற்றிலும் ஒழித்துக்கட்டப்படும் என்று மூவாண்டுக்கு முன்னரே அறிவித்து விட்டார்.

சிகரெட்டுகளை முற்றிலும் தடை செய்வது சாத்தியமா? வாய்ப்பில்லை என்கின்றனர் நாட்டு மக்கள் சிலர்.

சிகரெட்டுகள் கறுப்புச் சந்தையில் தொடர்ந்து கிடைக்கும். இன்னும் விலை உயர்ந்துவிடும் என்று ஒருசிலர் தெரிவித்தனர்.

"அவ்வளவு பணம் கொடுத்து யார் சிகரெட்டுகளை வாங்கப் போகின்றனர்? புகைக்கும் பழக்கத்தையே கைவிட்டுவிடுவர்" என்று மற்ற சிலர் குறிப்பிட்டனர்.

ஆதாரம் : AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset