நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இரவு கேளிக்கை விடுதியில் துப்பாக்கிச் சூடு: மூவர் மரணம்

புரூக்ளின்:

அமெரிக்காவின் புரூக்ளின் (Brooklyn) வர்த்தக வட்டாரத்தில் உள்ள இரவு கேளிக்கை விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூவர் மாண்டனர்.

துப்பாக்கிச் சூடு நேற்று (ஆகஸ்ட் 17) அதிகாலையில் நடத்தப்பட்டது.

தகவல் அறிந்து காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

மாண்ட ஆடவர்களில் ஒருவருக்கு 27 வயது, இன்னொருவருக்கு 35 வயது. மற்றொருவரின் வயது தெரியவில்லை.

8 பேர் காயமடைந்தனர். அவர்களது உயிருக்கு ஆபத்து இல்லை என்று சொல்லப்படுகிறது. அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.

துப்பாக்கிச் சூட்டைப் பலர் நடத்தியதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்த்து.

பல துப்பாக்கிகளில் குறைந்தது 36 முறை சுடப்பட்டதாகத் தெரிகிறது.

கூட்ட நெரிசலாக இருந்தபோது இரவு விடுதியில் ஏற்பட்ட தகராற்றைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக நம்பப்படுகிறது.

CCTV காணொலிகளைக் கொண்டு விசாரணை நடத்தப்படுகிறது.

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தப்பிவிட்டனர்.

காவல்துறை இதுவரை யாரையும் கைது செய்யவில்லை.

ஆதாரம் AFP

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset