நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சாங்கி விமான நிலையம் செல்லும் பேருந்தில் பயணப்பெட்டிகள் வைக்க புதிய வசதி

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திற்குச் சேவை வழங்கும் பேருந்துச் சேவை எண் 36ல் முன்னோட்ட நடவடிக்கையாக பயணப்பெட்டிகள் வைக்க புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மூன்று அடுக்கு உள்ள சட்டத்தில் 6 பெரிய பெட்டிகள் வரை வைக்கமுடியும்.

பெட்டிகள் நகராமல் இருப்பதற்கும் கீழே விழாமல் இருப்பதற்கும் சிறப்பு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறி உள்ளது.

முன்னோட்ட அடிப்படையில் மேற்கொள்ளும் முயற்சி இன்று (17 ஆகஸ்ட்) முதல் 3 மாதங்கள் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பயணிகளின் கருத்துகள் சேகரிக்கப்படும்.

தற்போது சாங்கி விமான நிலையத்துக்கு நேரடியாகச் செல்லும் ஒரே பேருந்துச் சேவை எண் 36.

விமான நிலையத்துக்குச் செல்லும் பயணிகளுக்கு மேலும் சிறந்த சேவை வழங்குவதற்குப் புது முயற்சி எடுக்கப்படுவதாக நிலப் போக்குவரத்து ஆணையம் சொன்னது.

அதிக பயணப் பெட்டிகளை வைத்திருக்கும் பயணிகள், விமான நிலையத்திற்குச் செல்வதையும், அங்கிருந்து புறப்படுவதையும் இச்சேவை வசதியாக்கும்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset