நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பாலர்பள்ளி மாணவியை அடித்து உதைத்த முன்னாள் ஆசிரியருக்குச் சிறை

சிங்கப்பூர்:

பாலர்பள்ளி மாணவியை உதைத்த முன்னாள் ஆசிரியருக்கு 4 நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 2ஆம் தேதி, பாலர்பள்ளியில் பிள்ளைகள் தூங்குவதற்காக 57 வயது அலமேலு பரமகுரு ஏற்பாடு செய்துகொண்டிருந்தார்.

தூங்குவதற்கு இடம் ஒதுக்கும்படி அவர் பிள்ளைகளிடம் கூறியிருந்தார்.

தரையில் உட்கார்ந்து கொண்டிருந்த சிறுமி ஒருவர் மட்டும் நகரவில்லை.

அப்போது அலமேலு சிறுமி மீது தடுக்கிக் கீழே விழப்பார்த்தார். ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை. 

சினமடைந்த அலமேலு சிறுமியை உதைத்ததுடன் சத்தமாக அவரைத் திட்டினார். அதனால் சிறுமியின் காலில் காயம் ஏற்பட்டது.

விவரம் அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.

அலமேலு வேலையிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டதாக ECDA எனும் குழந்தைப் பருவ மேம்பாட்டு அமைப்பு சொன்னது.

அவர் பின்னர் வேலையிலிருந்து விலகிக்கொண்டதாக அது கூறியது.

அலமேலு மீண்டும் பாலர்பள்ளித் துறையில் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக  அமைப்பு தெரிவித்தது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset