நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

புக்கிட் மேரா அடுக்குமாடி குடியிருப்பில் தீ: மூவர் மருத்துவமனையில் அனுமதி  

சிங்கப்பூர்:

புக்கிட் மேராவில் வீடமைப்பு வளர்ச்சிக் கழக அடுக்குமாடி வீடொன்றில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 21) காலை தீமூண்டதைத் தொடர்ந்து மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளனர்.

புக்கிட் பெர்மெய் ரோட்டில் உள்ள புளோக் 108இல் நெருப்புப் பற்றியதாக அதிகாலை சுமார் 2.30 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

தீயணைப்பாளர்கள் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, 12ஆம் தளத்தில் உள்ள வீட்டின் வரவேற்பறையில் தீ மூண்டிருந்தது.

அதிரடியாக வீட்டிற்குள் நுழைந்த குடிமைத் தற்காப்புப் படையினர் தண்ணீரைப் பீய்ச்சித் தீயை அணைத்தனர். நெருப்பால் வரவேற்பறை மட்டுமே பாதிக்கப்பட்டது.

தீயணைப்பாளர்கள் நெருப்பைக் கட்டுக்குள் கொண்டுவந்தபோது, இரண்டு படுக்கையறைகளில் இருந்து மூவரை மீட்டனர். சுயநினைவுடன் இருந்த மூவரும் புகையை உள்ளிழுத்ததால் மூச்சுவிடச் சிரமப்படுகிறார்களா என்று முதலில் சோதித்துப் பார்க்கப்பட்டது. பின்னர் அவர்கள் சிங்கப்பூர்ப் பொது மருத்துவனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

தீ மூண்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணை நடைபெறுகிறது. 

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset