நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டு வைத்திருந்தாலோ வாங்கினாலோ 2,000 வெள்ளி வரை அபராதம்

சிங்கப்பூர்:

இரவுக் கேளிக்கை விடுதிகளில் இனி மின்-சிகரெட்டுகளுக்கு எதிரான அறிக்கைகள் ஆங்காங்கே ஒட்டப்படும் என்று சிங்கப்பூர் சுகாதார அறிவியல் ஆணையம் சொன்னது.

சிங்கப்பூர் இரவுநேர வர்த்தகச் சங்கத்துடன் சேர்ந்து கொண்டுவரும் முயற்சியாக அது அமைகிறது.

மின் சிகரெட்டு புழக்கம் சட்டவிரோதம் என்பதையும், அது பற்றிப் புகாரளிக்கவும் இரவு விடுதிக்குச் செல்வோருக்கு நினைவூட்டுவது நோக்கம். 

அறிவிப்பில் QR விரைவுக் குறியீடு இணைக்கப்பட்டிருக்கும். அதை வருடினால் ஆணையத்தின் இணையத்தளத்தில் சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகளைப் பற்றிப் புகார் செய்யமுடியும். 

சிங்கப்பூர் இரவுநேர வர்த்தகச் சங்கம் போன்ற வர்த்தக அமைப்புகளுடன் சேர்ந்து பணியாற்றினால் மின்-சிகரெட்டுகளுக்கு எதிராக மேலும் வலுவான நடவடிக்கை எடுக்கமுடியும் என்று சுகாதார அறிவியல் ஆணையம் நம்புகிறது.

சிங்கப்பூரில் மின்-சிகரெட்டு தடைசெய்யப்பட்டுள்ளது.

அதை வைத்திருந்தாலோ வாங்கினாலோ 2,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.

- ரோஷித் அலி

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset