நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரவே இந்தியா மீது அதிக வரி விதிப்பு: டிரம்ப்

நியூயார்க்: 

ரஷியா - உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிக வரி விதித்தார் என்று வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் கூறுகையில், மூன்று ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வரும் ரஷியா - உக்ரைன் போரை நிறுத்த அதிபர் டிரம்ப் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறார். இதில் இந்தியாவுக்கு விதிக்கப்பட்ட அதிக வரியும் ஒரு நடவடிக்கையாகும்.

போரை நிறுத்தியாக வேண்டும் என்பதில் அதிபர் டிரம்ப் உறுதியாக உள்ளார் என்றார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா அளிக்கும் நிதியை உக்ரைன் போரில் ரஷியா பயன்படுத்துகிறது என்று கூறி இந்தியா மீது 50 சதவீதம் வரியை டிரம்ப் விதித்துள்ளார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

பகிர்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset