நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தமிழ் மொழிக்கு இணையான மொழி ஏதும் இல்லை: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் ஆ. ராசா

கோலாலம்பூர்: 

தலைநகர் டாங் வாங்கி செய்யது உணவக மண்டபத்தில் இன்று மாலை நடைபெற்றமுத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் பேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆ. ராசா  தமிழ் மொழிக்கு இணையான மொழி ஏதும் இல்லை என்று கூறினார்.

இன்றைய இந்திய அரசியலில் மதத்தால் நாம் பிரிந்து கிடந்தாலும் நம்மை ஒன்றுபடுத்துவது தமிழ் தான் என்று அவர் குறிப்பிட்டார்.

2000 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களை கல்வி கற்கச் சொன்ன மொழிதான் தமிழ் மொழி. 

ஒரு சமூகம் நம்மை ஆதிக்கம் செலுத்த முற்பட்டபோது அதற்கு எதிராக இயக்கம் கண்டவர் நம் பெரியார் அவர்கள். அவரது வழியில் வந்தவர்கள், அறிஞர் அண்ணாவும் டாக்டர் கலைஞர் அவர்களும். 

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை

என்ற குரலுக்கும் விளக்கம் தந்த கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை என்று கூறினார். 

படிக்காமல் செய்து நம்மை சனாதனத்தில் தள்ளியது யார்? எந்த மொழி?  அதையெல்லாம் சுக்குநூறாய் உடைத்தவர் 5 முறை தமிழகத்தை ஆட்சி செய்த கலைஞர்.

தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து வேண்டும் என்று சாதித்து  வெற்றி பெற்றவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்.

வேற்றுமையில் ஒற்றுமை என்பதை உலகிற்கு எடுத்துக்காட்டுவது தமிழ் மண் தான். நீங்கள், கிறிஸ்தவராக, முஸ்லிமாக, தளத்தப்பட்டவராக யாராக இருந்தாலும் மொழியால் நாம் அனைவரும் தமிழர் என்பதை நாம் உணர்ந்துள்ளோம். 

அரசியல் சட்டத்தின் அனைத்து அம்சங்களும் எல்லாருக்குமானவை என்று போராடியவர் கலைஞர்.

அவரது பிறந்த நாளை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் அயலகத் தமிழர் இயக்கமும் ஈமான் கட்சியும் இணைந்து நடத்தியது போற்றுதலுக்குரியது. இங்கு வந்துள்ள அனைத்து இயக்கத்தினருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு ஆ. ராசா பேசினார். 

May be an image of 6 people, dais and text

நிகழ்ச்சிக்கு ஈமான் கட்சியின் தலைவர் டத்தோ இஸ்மாயில் தலைமை தாங்க அயலகத் தமிழர் பிரிவின் மலேசிய மண்டல பொறுப்பாளர் ஃபிர்தவுஸ் கான் வரவேற்புரை ஆற்றினார்.

முன்னதாக தி மு க மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் அப்துல்லாஹ் சிற்றுரை நிகழ்த்தினார். நாம் அமெரிக்கா போன்ற பல ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டாலும் மலேசியாவில் கலந்துகொள்ளும்போது உள்ளபடியே மகிழ்ச்சியாக உள்ளது. அங்கெல்லாம் நம்மவர்கள் அதிகபட்சம் 1970களுக்கு பிற்பாடு தொழில் நிபுணர்களாக சென்றவர்கள். ஆனால் மலேசியாவில் 200 ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே நமக்கு தொடர்பும் உறவும் உள்ளது. இந்த தொப்புள் கொடி உறவு ஆழமானது என்று அவர் பேசினார்.

இறுதியில் விருந்தினர்களுக்கு பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்யப்பட்டது. 

- ஃபிதா  

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset