
செய்திகள் மலேசியா
இனிப்பு நீர் நோயாளிகளுக்கு உகந்த மலேசியாவின் முதல் ப்ரீபயாடிக் அரிசி, 'பெராஸ் பஹாங்': ஒரு கிலோ RM8க்கு விற்பனை
டெமர்லோ:
பெராஸ் பஹாங் என்ற பிராண்ட் பெயரில் சந்தைப்படுத்தப்படும் ப்ரீபயாடிக் அரிசியை உற்பத்தி செய்யும் மலேசியாவின் முதல் மாநிலமாக பகாங் மாறியுள்ளது.
இனிப்பு நீர் நோயாளிகளுக்கு உகந்த மலேசியாவின் முதல் ப்ரீபயாடிக் அரிசி, 'பெராஸ் பஹாங்' சந்தையில் ஒரு கிலோ RM8க்கு விற்பனைக்கு வருகிறது.
மென்திரி பெசார் டத்தோஸ்ரீ வான் ரோஸ்டி வான் இஸ்மாயில் கூறுகையில், இந்த அரிசி பல நன்மைகளை வழங்குவதால் மற்ற உள்ளூர் வகைகளிலிருந்து வேறுபடுகிறது என்றார்.
“பெராஸ் பஹாங் அரிசிக்கு தனித்துவம் உள்ளது. இது ஒரு ப்ரீபயாடிக் அரிசி. அதாவது இதில் சர்க்கரை அளவு குறைவாக உள்ளது. மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றது என்றார் அவர்.
“இது ஏற்கனவே குறைந்த அளவுகளில் சந்தையில் நுழைந்துள்ளது. இப்போதைக்கு, மற்ற மாநிலங்களில் விநியோகிப்பதற்கு முன்பு பகாங் மாநில சந்தை விற்பனைக்கு முன்னுரிமை அளிக்கிறோம்,” என்று அவர் இன்று இங்குள்ள டாத்தாரான் டெமர்லோவில் பகாங் மினி மஹா 2025 ஐத் திறந்து வைத்த பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 17, 2025, 7:44 am
சுகர் மம்மி மோசடி; இளைஞர்களுக்கு வலை விரிக்கும் மோசடி கும்பல்: எச்சரிக்கும் போலிஸ்
August 16, 2025, 4:45 pm