நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் 5 மில்லியன் பேர் சிகரெட் புகைக்கின்றார்கள்; சிகரெட்டுகளின் விலை உயர்த்தப்பட வேண்டும்: பிரதமருக்கு பி.ப. சங்கம் வேண்டுகோள்

பினாங்கு:

2026 பட்ஜெட்டில் நிதியமைச்சர்  சிகரெட்டுகளுக்கு விற்பனை வரியை அறிவிக்கக் கூடும் என்பதை அறிந்து பினாங்கு பயனீட்டாளர்  சங்கம் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அச் சங்கத்தின் கல்வி, புகைப்பதற்கு எதிரான அதிகாரி என்.வி.சுப்பாராவ் தெரிவித்தார்.

விற்பனை வரி விதிக்கப்பட்டால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் சிகரெட்டுகளுக்கு செலவிடும் பணத்தை மிச்சப்படுத்த முடியும் என்றார் அவர்.

நம் நாட்டில் இப்போது உள்ள 50 லட்சம் சிகரெட் புகைப்பாளர்களின் எண்ணிக்கை குறையக்கூடும் என்றார் சுப்பாராவ்.

கடைசியாக புகையிலை பொருட்களுக்கு 2018 ல் விற்பனை, சேவை வரி விதிக்கப்பட்டது.

அதன் பிறகு, 8 ஆண்டுகளாக சிகரெட்டுகளுக்கு வரி எதுவும் விதிக்கபட வில்லை என்றார் அவர்.

இது ஒரு பெரிய ஏமாற்றம்.

புகைப்பிடிப்பவர்கள் ஒவ்வொரு மாதமும் சுமார் 500 ரிங்கிட் வரை செலவிடுகிறார்கள் என்று சுப்பாராவ் கூறினார்.

ஆரோக்கியமான உணவுக்கு கூட அவ்வளவு செலவாகாது.

நாட்டில் உள்ள  5 மில்லியன் சிகரெட் புகைப்பவர்களைக் குறைக்க அரசாங்கம் விரும்பினால், 2026 வரவு செலவு திட்டத்தில் சிகரெட்டுகளுக்கு கட்டாய விற்பனை வரி விதிக்கப்பட வேண்டும்  என்று பி.ப.சங்கம் எதிர்பார்க்கிறது.

அனைத்து மட்டங்களிலும் உள்ள நாடுகளிலிருந்து பெறப்பட்ட சான்றுகள், சிகரெட் விலையை உயர்த்துவது தேவையைக் குறைப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதைக் காட்டுகின்றன.

அதிக வரிகள் சில புகைப்பிடிப்பவர்களை அப் பழக்கத்திலிருந்து விட்டுவிட ஊக்குவிக்கின்றன, மற்றவர்கள் புகைபிடிப்பதைத் தடுக்கின்றன என்றார் அவர்.

இந்த உண்மை மற்ற நாடுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால், நமது பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிகரெட்டுகளுக்கு விற்பனை வரியை, 2026 வரவு செலவு திட்டத்தில்  அறிவிப்பார் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எதிர்பார்ப்பதாக  சுப்பாராவ் தெரிவித்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset