
செய்திகள் மலேசியா
வெளிநாட்டினர் விசா வைத்திருந்தாலும் சட்டத்திலிருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட மாட்டாது: உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன்
கோலாலம்பூர்:
வெளிநாட்டினர் வைத்திருக்கும் விசா அந்தஸ்து இந்த நாட்டில் சட்டத்தை மீறுவதற்கு அவர்களுக்கு விலக்கு அளிக்காது.
மலேசியாவின் சட்டங்களை மீறும் எந்தவொரு வெளிநாட்டினருக்கும் எதிராக உறுதியான, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைஃபுதீன் நசுதியோன் இஸ்மாயில் கூறினார்,
இதில் விசா வைத்திருப்பினும் அரசு விதித்துள்ள நிபந்தனைகளை மீறுதல், பாதுகாப்பு அச்சுறுத்தல் அல்லது பொது ஒழுங்கை சீர்குலைத்தல் ஆகியவை அடங்கும்.
மலேசிய சட்டத் திட்டத்தை மீறினால் அவர்களது அனுமதி ரத்து செய்தல், கருப்புப் பட்டியலில் சேர்த்தல், சொந்த நாட்டிற்கு நாடு கடத்தல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்
தனிநபரின் பின்னணி அல்லது அந்தஸ்தைப் பொருட்படுத்தாமல் இந்தக் கொள்கை தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
“மாணவராகவோ, முதலீட்டாளராகவோ, நீண்டகால வருகை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவராகவோ அல்லது மலேசியா எனது இரண்டாவது வீடு (MM2H) திட்டத்தில் பங்கேற்பவராகவோ இருந்தாலும், விசா அந்தஸ்து இந்த நாட்டின் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்காது.
“மலேசியர்களின் பாதுகாப்பும், நாட்டின் இறையாண்மையும் முக்கியம்,” என்று அவர் நேற்று இரவு ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
மலேசியா காவல்துறை (PDRM) இனம் அல்லது பிறப்பிடத்தை அடிப்படையாகக் கொண்ட பாகுபாடு காட்டாமல் அல்லது விதிவிலக்குகள் இல்லாமல், குறிப்பாக வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில், அதன் அமலாக்கக் கடமைகளை தொழில்முறை முறையில் தொடர்ந்து நிறைவேற்றுகிறது என்று சைஃபுதீன் கூறினார்.
வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட அனைத்து அறிக்கைகளையும் சட்டம் விசாரித்து, ஊடகங்களில் வரும் வழக்குகள் உட்பட, பொது பாதுகாப்பை உறுதி செய்ய பொருத்தமான நடவடிக்கை எடுக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 17, 2025, 10:30 pm
தமிழ் மொழிக்கு இணையான மொழி ஏதும் இல்லை: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் ஆ. ராசா
August 17, 2025, 7:02 pm
மலேசிய இந்தியர்களின் கல்வித் தந்தை டான்ஸ்ரீ எம்.தம்பிராஜாவிற்கு இரங்கல் கூட்டம்
August 17, 2025, 7:44 am
சுகர் மம்மி மோசடி; இளைஞர்களுக்கு வலை விரிக்கும் மோசடி கும்பல்: எச்சரிக்கும் போலிஸ்
August 16, 2025, 4:45 pm