நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டின் அடையாளமாகவும் கண்ணியத்தின் சின்னமாகவும் விளங்கும் ஜாலூர் ஜெமிலாங்கை அனைவரும் மதிக்க வேண்டும்: டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா 

புத்ரா ஜெயா:

நாட்டின் அடையாளமாகவும் கண்ணியத்தின் சின்னமாகவும் விளங்கும் ஜாலூர் ஜெமிலாங்கை நாம் அனைவரும் மதிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கும் கூட்டரசு பிரதேச வணிக வளாகங்களுக்கும்  நினைவூட்டப்படுகிறது.

முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய மலேசியக் கொடி, மக்களிடையே நாட்டின் மீதான அன்பை விதைக்கும் திறன் கொண்டது என்று கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தாபா தெரிவித்துள்ளார்.

எனவே, வணிக வளாகங்களும் பொது மக்களும் கொடியை ஏற்றும் போது நிர்ணயிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கவனமாக செயல்படும்படி சலிஹா அறிவுறுத்தினார்.

"நாட்டின் கெளரவத்தையும் நாட்டின் பெருமையின் சின்னத்தையும் பராமரிக்க பரிந்துரைக்கப்பட்ட படி, கடந்த சில வாரங்களாக நிகழ்ந்த சில சம்பவங்கள் மலேசியக் கொடியை ஏற்றும் போது கவனமாக இருக்க வேண்டும் என்பதை நினைவூட்டுகின்றன," என்றார் அவர்.

இன்று புத்ரா ஜெயாவில் நடைபெற்ற கெஅடிலான் கட்சி ஏற்பாட்டிலான மடானி நிகழ்ச்சியில் கலந்து கொண்டப் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset