நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

சுகர் மம்மி மோசடி; இளைஞர்களுக்கு வலை விரிக்கும் மோசடி கும்பல்: எச்சரிக்கும் போலிஸ்

கோலாலம்பூர்: 

மலேசியாவில் உள்ள மோசடி கும்பல்கள் சமூக ஊடகங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றைப் பயன்படுத்தி, குழந்தை பாலியல் சுரண்டல், மிரட்டி பணம் பறித்தல், சட்டவிரோத விற்பனை ஆகியவற்றைக் கலந்து அதிநவீன மோசடிகளை செயல்படுத்தி வருகின்றன. 

இதில் அவர்களது இலக்கு பதின் பருவத்தைச் சேர்ந்த டீனேஜர்கள். அவர்கள்தான் முதன்மை பாதிக்கப்பட்டவர்களாக உள்ளனர்.

மலேசிய சைபர் நுகர்வோர் சங்கத்தின் (MCCA) தலைவர் சிராஜ் ஜலீல் கூறுகையில், கடந்த பத்தாண்டுகளில் பாரம்பரிய மக்காவ், காதல் பரிசு மோசடி, சூதாட்டம் முதல் சிக்கலான, பல அடுக்கு சைபர் குற்றங்கள் வரை மோசடிகள் வியத்தகு முறையில் தற்போது உருவாகியுள்ளன.

டிக்டோக்கில் 'சர்க்கரை மம்மி' (sugar mummi) சேவை சலுகைகளை உள்ளடக்கிய ஒரு புது ரக மோசடியை அவர் எடுத்துரைத்தார், இளைஞர்களை கவர்ந்திழுத்து, குழந்தை பாலியல் சுரண்டல் பொருள் (C-SET) என வகைப்படுத்தப்பட்ட தனிப்பட்ட அந்தரங்க உள்ளடக்கத்தைப் பகிர அவர்கள் வற்புறுத்தப்படுகின்றனர். 

பின்னர் அவ்ற்றை பொதுமக்களிடம் காட்டப்படும் என்று மிரட்டப்படுகின்றனர். அதை வெளிப்படுவதைத் தவிர்க்க பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து ஆயிரக்கணக்கான ரிங்கிட் பணம் பறிக்கப்படுகிறது.

"மீட்புப் பணம் செலுத்திய பிறகும், டெலிகிராம் போன்ற தளங்களில் அவர்களது படங்களும்  பொருட்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன. இது போன்ற மோசடி கும்பல்களின் பிடியில் சிக்கவேண்டாம் என்று சிராஜ் ஜலீல் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

- ஃபிதா

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset