நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

13 லட்சம் ரிங்கிட் மோசடியில் 58 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ள சந்தேக நபர்  மன நலம் குன்றியவராக நாடகமாடுகிறார்?: சந்திராஜன்

சுங்கைப்பட்டாணி:

பிரபல காப்புறுதி நிறுவனத்தின் குழுவகத் தலைமை இயக்குநர் தி. சந்திரராஜனிடமிருந்து 13 லட்சம் ரிங்கிட்டை மோசடி செய்ததாக, 58 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியிருக்கும் வி.இளங்கோ (வயது 56) மன நலம் குன்றியவர் போல் பாசாங்கு செய்வதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதியன்று இங்கு சுங்கைப்பட்டாணியிலுள்ள மாஜிஸ்ட்திரெட் உயர் நீதிமன்றத்தில் முதல் முறையாக தன் மீது சுமத்தப்பட்ட 58 குற்றச்சாட்டுகளையும் மறுத்து அவர் விசாரணை கோரியிருந்தார்.

அதனை தொடர்ந்து நேற்று புதன்கிழமை இவ்வழக்கு மறுவிசாரணைக்கு வந்தது.

போலிசாரால் நீதிமன்றம் கொண்டு வரப்பட்ட இளங்கோ, தன்னுடைய வழக்கறிஞர் இன்னும் வரவில்லை என்றும் குற்றச்சாட்டுகளை ஒப்புக் கொள்ளவில்லை எனவும் வாதிட்டார்.

இதனை செவிமெடுத்த நீதிபதி, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.

மாறாக வழக்கறிஞர் இன்னும் சில தஸ்தாவேஜுக்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டினார்.

பாசாங்கு?

இதனிடையே, அதிகப்பட்ச தண்டனையிலிருந்து தப்பிக்கும் முயற்சியாக, இளங்கோ தன்னை மன நலம் பாதிக்கப்பட்டவராகக் காட்டிக் கொள்கிறார் என தாம் சந்தேகிப்பதாக சந்திரராஜன் இங்கு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பால்ய நண்பரான தம்மை கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் ஏமாற்றியிருக்கும் இளங்கோவுக்கு வழங்கப்படும் தண்டனையானது, வெளியில் அப்பாவிகளை குறி வைக்கும் ஏமாற்றுப் பேர்வழிகளுக்கு மிரட்டலாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என சந்திரராஜன் கேட்டுக் கொண்டார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset