நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாரா மரண வழக்கின் விசாரணை அதிகாரிகள், மேற்பார்வையாளர்களிடம் புக்கிட் அமான் விசாரணை 

கோலாலம்பூர்:

ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ள மேற்பார்வையாளர்கள் உட்பட விசாரணை அதிகாரிகள் மீது புக்கிட் அமான் நேர்மை, தரநிலை இணக்கத் துறை விசாரணை நடத்துகிறது.

புக்கிட் அமான் நேர்மை, தரநிலை இணக்கத் துறை இயக்குநர்  டத்தோ ஹம்சா அகமது  இதனை தெரிவித்தார்.

13 வயது மாணவியின் மரணம் தொடர்பான விசாரணை நடைமுறைகளை பின்பற்றாதது உட்பட, இந்த சம்பவம் குறித்து தனது துறையால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

ஷாரா கைரினாவின் மரணம் தொடர்பான விசாரணை நடைமுறைகளை பின்பற்றாதது உட்பட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விசாரணையில் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர்,  மாவட்ட காவல்துறைத் தலைவர் போன்ற மேற்பார்வையாளர்களும் ஈடுபட்டுள்ளார்களா என்று கேட்டபோது,

சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இன்னும் அவரது துறையால் விசாரணையில் உள்ளன என்று ஹம்சா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset