நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின்  உறுப்பினர்கள் எண்ணிக்கையை  அதிகரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன?: ராமசாமி கேள்வி

பட்டர்வொர்த்:

பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின்  உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதன் நோக்கம் என்ன?.

அவ்வாரியத்தின் முன்னாள் தலைவர் பேராசிரியர் டாக்டர் ராமசாமி இக்கேள்வியை எழுப்பினார்.

பினாங்கு இந்து அறப்பணி வாரிய உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

குறிப்பாக இந்த நடவடிக்கை வாரியத்தின் செயல்திறன் குறித்து கவலைகளை எழுப்புகிறது

பொதுவாக 11 உறுப்பினர்களை கொண்ட வாரியம் 19 உறுப்பினர்களாக உயர்ந்துள்ளது

இதற்கு மாநில அரசிடமிருந்து எந்த விளக்கமும் இல்லை.

பினாங்கு மாநில நிர்வாகக் குழுவில் சுமார் 11 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர் 

ஆனால் இந்து அறப்பணி வாரியத்திற்கு  ஏன் இவ்வளவு பெரிய வரிசை தேவை என்பது புதிராக உள்ளது என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.

வாரியம்  தலைவர், செயலாளர், ஒரு உறுப்பினரை மட்டுமே கொண்டு செயல்பட முடியும்.

ஒருவேளை தலைவர் இல்லாவிட்டால் கூட்டங்கள் செயலாளரின் தலைமையில் கூட தொடரலாம்.

வாரியம் பினாங்கின் இந்து சமூகத்திற்கு உதவுவதில் மந்தமாக இருந்தது. 

கூடுதல் உறுப்பினர்களை சேர்ப்பது வாரியத்தை அதன் தூக்கத்திலிருந்து எவ்வாறு எழுப்பும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்று உரிமை கட்சியின் தலைவருமான ராமசாமி கூறினார்.

முன்னதாக ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என். ராயர் ஆகஸ்ட் 1 முதல் அடுத்த ஒரு வருடத்திற்கு வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset