நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகன் சம்சுல் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் தாய்க்கு ஒட்டுமொத்த சமுதாயமும் துணை நிற்கும்: டத்தோஸ்ரீ செய்யது இப்ராஹிம்

கோலாலம்பூர்:

மகன் சம்சுல் மரணத்திற்கு நீதி கேட்டு போராடும் தாய்க்கு ஒட்டுமொத்த சமுதாயமும் துணை நிற்கும்.

கிம்மாவின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ செய்யது இப்ராஹிம் இதனை கூறினார்.

ஸ்கூடாய் மலேசியா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில்  ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படையில் (PALAPES) பயிற்சி பெற்ற 22 வயதான சம்சுல் ஹாரிஸ் ஷம்சுடின்  காலமானார்.

வலிப்பால் அம்மாணவர் மரணமடைந்தார் என கூறப்படுகிறது.

ஆனால் அவரின் கண், மூக்குப் பகுதிகளில் ரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக அவரின் உடலின் பல பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.

இதனால் மாணவர் சம்சுல் ஹரிசின் மரணத்தில் பல மர்மங்கள் மறைந்துள்ளது.

இதனால் அவரின் தாயார் நீதி கேட்டு தொடர்ந்து போராடி வருகிறார்.

அவருக்கு பின்னால் ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் சமுதாயமும் உள்ளது.

குறிப்பாக கிம்மாவின் சார்பில் 30க்கும் மேற்ப்பட்ட போலிஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளது.

ஆக போலிசார் துரிதமான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என டத்தோஸ்ரீ செய்யது இப்ராஹிம் கூறினார்.

முன்னதாக சிம்ஸ் இயக்கத்தின் தலைவர் எம்ஷெட் கனி ஏற்பாட்டில் சிறப்பு செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது.

சம்சுல் தாயாருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அரசியல் கட்சி, அரசு சாரா இயக்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset