நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திருடப்பட்ட 2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கேசினோ சிப்ஸ்களை போலிசார் வெற்றிகரமாக கைப்பற்றினர்

குவாந்தான்:

திருடப்பட்ட 2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள கேசினோ சிப்ஸ்களை போலிசார் வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளனர்.

பகாங்  போலிஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா ஓத்மான் இதனை தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 2 ஆம் தேதி கெந்திங்மலையில்  திருடப்பட்ட 2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 300 கேசினோ சிப்ஸ்களில் 200ஐ போலிசார் வெற்றிகரமாக கைப்பற்றியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஊடக செய்திகளைத் தொடர்ந்து,

சந்தேகிக்கப்படும் ஒருவரிடமிருந்து வாங்கிய தலா 10,000 ரிங்கிட் மதிப்புள்ள 200 கேசினோ சிப்ஸ்களை ஒப்படைக்க ஒருவர் முன்வந்துள்ளார்.

இதனிடையே கேஎல்ஐஏ விமான நிலையத்தின் ஆட்டோகேட் வழியாக தப்பிச் சென்ற சந்தேக நபரிடம் மீதமுள்ள 100 கேசினோ சிப்ஸ்களை  இண்டர்போல் அதிகாரிகளுடன் இணைந்து போலிஸ் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

சிசிடிவி காட்சிகளில் சந்தேக நபர் சிப்பை எடுத்துக் கொண்டு கார் பார்க்கிங்கிற்கு நடந்து செல்வதையும்,

பின்னர் கெந்திங்மலையில் உள்ள கேசினோவிலிருந்து அவசரமாக வெளியேறி அதே நாளில் கேஎல்ஐஏவுக்குச் செல்வதையும் யாஹ்யா கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset