நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மலேசியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும்  வலுப்படுத்த 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன

கோலாலம்பூர்:

மலேசியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடப்பட்டன

கல்வி, பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், ஹலால் சுற்றுச்சூழல் அமைப்பு ஆகிய துறைகளை உள்ளடக்கிய எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்திடப்பட்டன.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்,  வங்காளதேச தலைமை அரசாங்க ஆலோசகர் டாக்டர் முகமது யூனுஸ் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு  இங்குள்ள பெர்டானா புத்ரா வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததது.

இந்த இருதரப்பு சந்திப்பிற்குப் பிறகு ரிந்துணர்வு ஒப்பந்த ஆவணங்கள்,  ஒத்துழைப்பு குறிப்புகளில் கையெழுத்திடுவது,  பரிமாற்றத்தை அவர்கள் கண்டனர்.

வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மது ஹசான் மலேசியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தி தூதர்களுக்கான பயிற்சியில் ஒத்துழைப்புக்கான குறிப்பைப் பரிமாறிக் கொண்டார்.

அதே நேரத்தில் வங்காளதேசத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி வெளியுறவு ஆலோசகர் முகமது தௌஹித் ஹொசைன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset