நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வங்காளதேச தொழிலாளர்களுக்கு பல நுழைவு விசா வசதிகள்: பிரதமர் அறிவிப்பு

புத்ராஜெயா:

வங்காளதேச தொழிலாளர்களுக்கு பல நுழைவு விசா வசதிகள் வழங்கப்படும்.

புத்ராஜெயாவில் நடந்த வங்காளதேச தலைமை அரசாங்க ஆலோசகர் முகமது யூனுஸுடனான செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை அறிவித்தார்.

வங்காளதேச புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தலைவிதி வங்கதேசத்தின் தலைமை அரசாங்க ஆலோசகருடன் இடையே இன்று புத்ராஜெயாவில் விவாதிக்கப்பட்ட தலைப்புகளில் ஒன்றாகும்.

வங்காளதேச குடிமக்களுக்கு மலேசியாவிற்கு பல நுழைவு விசா வசதியை செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டு ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்களில் ஒன்று என்று கூறினார்.

வங்காள்தேசத்தை மலேசியாவிற்கு ஒரு முக்கிய கூட்டாளியாக விவரித்த அன்வார், நாட்டின் பல்வேறு துறைகளில் அந்நாட்டு தொழிலாளர்களின் பங்களிப்புகளையும் பாராட்டினார்.

வங்காளதேசத் தொழிலாளர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.

இந்த விசா வசதி, அவர்கள் தங்கள் குடும்பத்தினரைப் பார்க்கவும், பாதுகாப்பு உணர்வுடன் வேலைக்குத் திரும்பவும் வாய்ப்பளிக்கும் என்று அன்வர் மேலும் விவரிக்காமல் கூறினார்.

2022, 2024 க்கு இடையில் 480,000க்கும் மேற்பட்ட வங்காளதேசத் தொழிலாளர்கள் அங்கீகரிக்கப்பட்ட முகவர் நிலையங்கள் மூலம் மலேசியாவிற்குள் நுழைந்ததாக முன்னர் தெரிவிக்கப்பட்டது.

மலேசிய குடிவரவுத் துறையின் கூற்றுப்படி, மலேசிய பல-நுழைவு விசா அதன் வைத்திருப்பவர் விசாவின் செல்லுபடியாகும் காலத்திற்குள் பல முறை நாட்டிற்குள் நுழையவும் வெளியேறவும் அனுமதிக்கிறது.

பொதுவாக ஒரு வருடம், ஒவ்வொரு வருகையும் 30 நாட்களுக்கு மட்டுமே மற்றும் நீட்டிப்பு இல்லாமல் இருக்கும் என்று பிரதமர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset