
செய்திகள் மலேசியா
அடிமட்டத்தில் தேவைப்படும் இந்தியர்களுக்கு உதவ மித்ரா தவறிவிட்டது: கணபதிராவ்
கோலாலம்பூர்,:
அடிமட்டத்தில் தேவைப்படும் இந்தியர்களுக்கு உதவ மித்ரா தவறிவிட்டது.
கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் இதனை கூறினார்.
அடிக்கடி தலைமை மாற்றங்கள், அதிகாரத்துவம், நீண்டகால திட்டமிடல் இல்லாமை ஆகியவை இப்பிரச்சினைக்கு காரணமாகும்.
நிதி பெரும்பாலும் மிகவும் தேவைப்படுபவர்களைச் சென்றடைவதில்லை.
சில அமைச்சுகள் மித்ராவை ஒரு சரியான மேம்பாட்டு நிறுவனமாக இல்லாமல் ஒரு அவசர நிதி என்று கருதுவதாக அவர் கூறினார்.
மித்ராவை இந்திய சமூகம் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க ஒரு அவசர நிதியாகக் கருதும் சில அமைச்சுகள், அரசு நிறுவனங்களின் மனநிலை மிகவும் கவலையளிக்கிறது.
மக்களவையில் 13ஆவது மலேசியா திட்டம் குறித்த விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறினார்.
நாடாளுமன்ற மேற்பார்வையுடன் மித்ரா மறுசீரமைக்கப்பட்டாலோ அல்லது வருடாந்திர தணிக்கைகள், கல்வி, திறன்கள், சமூக உதவித் துறைகளில் தெளிவான இலக்குகள் நிர்ணயிக்கப்பட வேண்டும்.
இதனால் மித்ரா மிகவும் பயனுள்ளதாக மாற முடியும்.
மித்ராவின் மோசமான நிர்வாகம் குறித்து பிரதமரிடம் புகார் அளிக்கப்பட்டது.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கணபதிராவ் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2025, 8:20 pm
ஸ்ரீ முருகன் மையத்தின் நிறுவனர் டான்ஸ்ரீ மு. தம்பிராஜாவிற்கு இரங்கல் கூட்டம்
August 12, 2025, 6:03 pm
வலிப்பால் இறந்த என மகனின் உடலில் ஏன் கடுமையான காயங்களும் இரத்தப்போக்கும் இருந்தது: தாயார் ஐயம்
August 12, 2025, 12:53 pm
2014 முதல் அரசு பல்கலைக்கழகங்களில் 31 பகடிவதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: ஜம்ரி
August 12, 2025, 12:52 pm
வங்காளதேச தொழிலாளர்களுக்கு பல நுழைவு விசா வசதிகள்: பிரதமர் அறிவிப்பு
August 12, 2025, 12:18 pm