நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

2014 முதல் அரசு பல்கலைக்கழகங்களில் 31 பகடிவதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: ஜம்ரி

கோலாலம்பூர்:

2014 முதல் 2025 வரையிலான 11 ஆண்டு காலப்பகுதியில் எட்டு அரசு பல்கலைக்கழகங்களில் மொத்தம் 31 பகடிவதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

 உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் மக்களவையில் இதனை தெரிவித்தார்.

சமூக, உளவியல் காரணம், வளாக சூழல், சமூக ஊடகங்களின் செல்வாக்கு, பெற்றோரின் மேற்பார்வை இல்லாமை ஆகியவற்றிலிருந்து உருவான உடல், இணைய மிரட்டல் வழக்குகள் இதில் அடங்கும்.

பகடிவதை வழக்குகளில் ஈடுபடும் பொதுப் பல்கலைக்கழக மாணவர்கள் 2024 ஆம் ஆண்டு திருத்தங்கள் மூலம் தரப்படுத்தப்பட்ட மாணவர் ஒழுக்காற்று விதிகளின் விதிமுறை 3(1)(ஏ)(2) இன் கீழ் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்படலாம்.

இந்த விதிகள் குற்றத்தின் தீவிரத்தை அடிப்படையாகக் கொண்ட தண்டனைகளை வழங்குகின்றன.

இதில் எச்சரிக்கைகள், 24 மணி நேரத்திற்கு மிகாமல் சமூக சேவை, 500 ரிங்கிட் வரை அபராதம், வளாகத்தில் இருக்க தடை, மாணவர் கிராமத்திலிருந்து வெளியேற்றம், படிப்புகளை இடைநிறுத்துதல் அல்லது பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றுதல் ஆகியவை அடங்கும்.

இன்று மக்களவையில் நடந்த அமைச்சர்கள் கேள்வி நேர அமர்வின் போது அவர் இதனை கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset