நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெண்களின் ஆரோக்கியம், அழகு பற்றிய ஊக்கமளிக்கும் அரங்கம்: பெர்மிம் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் நடைபெற்றது

சுபாங் ஜெயா:

பெர்மிம் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில், "Glow & Grow" என்ற பெண்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு  கருத்தரங்கு டோர்செட் கிராண்ட் சுபாங் ஜெயாவில் வெற்றிகரமாக நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் 25 முதல் 70 வயது வரையிலான 80 பேருக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்:
இந்தக் கருத்தரங்கு, இந்திய முஸ்லிம் பெண்களின் ஆரோக்கியம், அழகு, மனநலனை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டது. 

இதில் பல்வேறு தலைப்புகளில் நிபுணர்கள் தங்கள் அறிவுரைகளைப் பகிர்ந்தனர்:

* மன அழுத்தம், மன ஆரோக்கியத்தை பராமரித்தல்
* 35 வயதுக்கு பிறகு கருத்தரிப்பு தொடர்பான தகவல்கள்
* தனிப்பட்ட சவால்களை நம்பிக்கையுடன் சமாளித்தல்
* ஷால் ஸ்டைலிங் மூலம் நேர்த்தியான தோற்றம்
* தோல் பராமரிப்பு, அழகுசாதன தீர்வுகள்

பெர்மிம் தலைவர் ஷேக் ஃபரிதுத்தீன் அன்வர்தீன் தனது உரையில், 

பெண்கள் தங்களது துறைகளில் மேம்பாடடைவது  இந்திய முஸ்லிம்சமுதாயத்திற்கு  பல நன்மைகளைத் தரும். 

இத்தகைய நிகழ்வுகள் அவர்களுக்கு புதியவற்றைக் கற்றுக் கொள்ளவும், புதிய முகங்களை சந்திக்கவும், சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தவும் உதவுகின்றன.என்று குறிப்பிட்டார்.

ஏற்பாட்டாளர்களின் பங்களிப்பு
இந்த நிகழ்வை பெர்மிம் பெண்கள் பிரிவு ஜரீனா, டத்தின் சப்ரினா ரஃபிடா ஆகியோரின் தலைமையில் வெற்றிகரமாக நடத்தியது. 

நிகழ்வில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்கள் ஏற்பாட்டாளர்களின் சிறந்த முயற்சியைப் பாராட்டினர்.

நிகழ்ச்சி தலைவரான ஜரீனா, குழு, துணைக் குழுவினர் முனைப்பாக உழைத்ததற்கும், நிதி ஆதரவு வழங்கிய நன்கொடையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறினார்.

இந்த நிகழ்வு, பெண்களின் ஆரோக்கியம், தன்னம்பிக்கையை உயர்த்துவதற்கான ஒரு சிறந்த முயற்சியாக அமைந்தது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset