நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சிங்கப்பூர் தஞ்சோங் காத்தோங் திடீர்ப்பள்ளம்: உதவிய வெளிநாட்டு ஊழியர்களுக்கு $70,000 வெள்ளி நிதி

சிங்கப்பூர்:

தஞ்சோங் காத்தோங்கில் ஏற்பட்ட திடீர்ப்பள்ளத்தில் சிக்கிய பெண் ஓட்டுநரைக் காப்பாற்றுவதில் விரைந்து செயல்பட்ட வெளிநாட்டு ஊழியர்களுக்கு 70,805 வெள்ளி நிதி அளிக்கப்பட்டுள்ளது.

ItsRainingRaincoats எனும் அமைப்பு அந்த நிதியை வழங்கியது.

பொதுமக்களிடமிருந்து இணையம் வாயிலாக நிதி திரட்டப்பட்டது.

சில வர்த்தக நிறுவனங்கள் அவர்களைப் பாராட்டிப் பரிசுகளும் வழங்கின.

நிதியைப் பெற்றுக்கொண்ட ஊழியர்கள் நன்றி தெரிவித்தனர்.

அந்தப் பணம் தங்களின் குடும்பத்துக்கும் பிள்ளைகளின் படிப்புக்கும் உதவியாக இருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

- ரோஷித் அலி 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset