
செய்திகள் இந்தியா
ராகுல், பிரியங்கா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது
புதுடெல்லி:
தேர்தல் ஆணையம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் எம்பிக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மகாராஷ்டிரம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வாக்காளர் பட்டியலில் நடைபெற்ற மோசடிகள் குறித்து கடந்த வாரம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உரிய ஆதாரங்களுடன் வெளியிட்டிருந்தார்.
பாஜக அரசுடன் சேர்ந்துகொண்டு தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டியில் ஈடுபடுவதாகவும் கடும் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டிருந்தன.
இன்று காலை வழக்கம் போல நாடாளுமன்றம் கூடியி நிலையில், நாடாளுமன்றத்திலிருந்து ராகுல் காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பிக்களின் தேர்தல் ஆணையம் நோக்கிப் பேரணியாகப் புறப்பட்டனர். சுமார் 25 கட்சிகளைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பேரணியாகப் புறப்பட்ட நிலையில், அவர்களை காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தடுத்து நிறுத்தினர்.
இந்த நிலையில், காவல்துறையினரின் அறிவுறுத்தலை ஏற்று கலைந்து செல்ல எம்பிக்கள் மறுத்த நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சஞ்சய் ராவத், ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அப்போது செய்தியாளர்களுடன் பேசிய ராகுல் காந்தி,
”அவர்களால் எங்களிடம் பேச முடியாது என்பதுதான் உண்மை. உண்மை நாட்டு மக்கள் முன் உள்ளது. இந்த போராட்டம் அரசியல் சார்ந்தது அல்ல. அரசியலமைப்பைக் காப்பாற்றுவதற்கானது.
ஒருவருக்கு ஒரு வாக்கு என்ற அடிப்படைக்காக போராடுகிறோம். எங்களுக்கு தேவை சுத்தமான, தூய்மையான வாக்காளர் பட்டியல்” எனத் தெரிவித்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2025, 4:56 pm
ட்ரம்ப் ஆட்சியில் 1,700 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்
August 9, 2025, 2:36 pm
தில்லியில் கனமழை: 100-க்கும் அதிகமான விமானங்கள் தாமதம்
August 9, 2025, 12:41 pm
அவசரகால மருந்துகளுக்கு விலை உச்சவரம்பு நிர்ணயம்: இந்திய அரசு முடிவு
August 8, 2025, 5:26 pm
உத்தராகண்ட் வெள்ளத்தில் சிக்கிய 274 பேர் மீட்பு: 59 பேரை தேடும் பணி தீவிரம்
August 8, 2025, 5:07 pm
இந்தியாவுடன் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்படாது: டொனால்ட் டிரம்ப்
August 8, 2025, 11:37 am
தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து பாஜ முறைகேடு: ஆதாரங்களை வெளியிட்டார் ராகுல் காந்தி
August 8, 2025, 10:51 am