நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ட்ரம்ப் ஆட்சியில் 1,700 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்

புது டெல்லி:

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள்  நுழைந்ததாக அதிபர் டிரம்ப் ஆட்சியில் இதுவரையில் 1,700 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்,

இதுதொடர்பான கேள்விக்கு இந்திய நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் கூறுகையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 2-வது ஆட்சி காலத்தில் இதுவரை 1,703 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் 1,562 பேர் ஆண்கள், 141 பேர் பெண்கள் ஆவர்.

அதிகபட்சமாக பஞ்சாபில் 620 பேரும், ஹரியானாவில் 604 பேரும், குஜராத்தில் 245 பேரும், தமிழகத்தைச் சேர்ந்த 17 பேரும் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 2009 முதல் 2024-ம் ஆண்டு வரை 15,564 இந்தியர்களை அமெரிக்கா திருப்பி அனுப்பியுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset