நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தேசியக் கொடி தலைக்கீழாக பறக்க விட்ட சம்பவம்: வளாக உரிமையாளர் கைது

பட்டர்வொர்த்:

பினாங்கில் தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட வழக்கில் போலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

பினாங்கு போலிஸ் தலைவர் முஹம்மத் அல்வி ஜைனல் ஆபிடின் இதனை கூறினார்.

விசாரணை ஆவணங்கள் நாளை முன்மொழியப்பட்ட குற்றச்சாட்டுகளுடன் துணை அரசு வழக்கறிஞரிடம் அனுப்பப்படும்.

தேசியக் கொடியை தலைகீழாக பறக்கவிட்ட சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் 16 போலிஸ் புகார்களைப் போலிசார் பெற்றுள்ளனர்.

இதில் பினாங்கில் 12 புகார்கள் அடங்கும்.

மற்ற நான்கு போலீஸ் புகார்கள் பினாங்கு போலிஸ் படைக்கு வெளியே இருந்து வந்தவை என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset