நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாராவை தொடர்ந்து மகன் சம்சுல் ஹரிஸ் உடலை மீண்டும் தோண்டி எடுக்க தாயார் கோரிக்கை

கோலாலம்பூர்:

ஷாராவை தொடர்ந்து  மகன் சம்சுல் ஹரிஸ் உடலை மீண்டும் தோண்டி எடுக்க வேண்டும் என அவரின்  தாயார் கோரிக்கை விடுத்துள்ளார்.

22 வயதான சம்சுல் ஜொகூரில் உள்ள உலு திராமில் ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை (பலப்ஸ்) பயிற்சியின் போது மரணமடைந்தார்.

பல்கலைக்கழக மாணவரான அவரின் மரணத்திற்கான காரணத்தை விசாரிக்க தனது மகனின் உடலை மீண்டும் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும்.

சம்சுல் ஹாரிஸின் தாயார் உம்மு ஹைமான் பீ தௌலத்குன்  என்னைச் சந்தித்தபோது தனது விருப்பத்தைத் தெரிவித்ததாக டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் ஜொஹான் அப்துல் ஹஜிஸ் தெரிவித்தார்.

இன்று அதிகாலையில் 13 வயதான ஷாரா கைரினா மகாதீரின் உடல் தோண்டி எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த விவகாரம் எழுந்தது.

சபாவில் ஷாரா கைரினாவின்  சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து நாங்கள் அதிர்ச்சியடைந்துள்ளோம்.

இது மக்களின் நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது.

இப்போது, பெரிய கேள்விகளை எழுப்பும் மற்றொரு சம்பவத்தை நாம் எதிர்கொள்கிறோம்.

மர்மமான சூழ்நிலையில் இரண்டு இளம் உயிர்கள் பறிபோயுள்ளன. இங்கு எழும் கேள்வி என்னவென்றால் - நம் நாட்டில் இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாக வேண்டும்?

இந்த வழக்கு சாதாரண மரணங்களின் சோகம் மட்டுமல்ல.

இது நாட்டின் நிறுவனங்கள், விசாரணை அமைப்பின் நேர்மைக்கான ஒரு சோதனை என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி உம்மு தனது 22 வயது மகன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பி, முழு விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

கடுமையான சிராய்ப்புகள், மூக்கு, கண்களில் இருந்து இரத்தப்போக்கு, துப்பாக்கிச் சூட்டுக் காயங்களை கண்டதாகவும், அந்தக் காயங்கள் தனக்குக் கொடுக்கப்பட்ட விளக்கத்துடன் பொருந்தவில்லை என்றும் அவர் கூறினார்.

அதன் அடிப்படையில் சம்சுலின் மரணம் குறித்து  போலிஸ், பாதுகாப்பு அமைச்சு, உயர்கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு விசாரிக்க வேண்டும் என ஜொஹான் வலியுறுத்தினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset