நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கெடாவைத் தொடர்ந்து தேசிய முன்னணியில் இருந்து வெளியேறுவதை பினாங்கு மஇகா பரிசீலிக்கிறது: டத்தோ தினகரன்

பட்டர்வொர்த்:

கெடாவைத் தொடர்ந்து தேசிய முன்னணியில் இருந்து வெளியேறுவதை  பினாங்கு மஇகா பரிசீலித்து வருகிறது.

பினாங்கு மாநில மஇகா தலைவர் டத்தோ ஜே. தினகரன் இதனை கூறினார்.

பினாங்கு மஇகா கெடாவின் வழியைப் பின்பற்றவும், தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து வெளியேறுவதை ஆதரிக்கவும் முடிவு செய்துள்ளது.

கட்சியின் மாநில அளவிலான ஆண்டு பொதுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

பினாங்கு மஇகாவின் 79ஆவது ஆண்டு பொதுக் கூட்டத்தின் போது, பினாங்கு மஇகாவின் பிரிவுத் தலைவர்களும் கிளைத் தலைவர்களும் இந்த முடிவை ஆதரித்தனர்.

ஆனால் கட்சித் தலைவர், மத்திய செயற்குழுவின் முடிவெடுப்பதற்கு விட்டுவிட ஒப்புக் கொண்டனர் என்று அவர் கூறினார்.

தேசிய முன்னணியில் இருந்து பினாங்கு மஇகா எதையும் பெறவில்லை.

மேலும் இந்த உணர்வு மஇகா தலைவர் டான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரனுக்கு தெரிவிக்கப்பட்டது.

மஇகாவை மாற்றுவது எளிதல்ல என்பதையும், மஇகா இல்லாமல் 16வது பொதுத் தேர்தலை எதிர்கொள்வது அவர்களுக்கு எளிதல்ல என்பதையும் நான் தேசிய முன்னணிக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

நாங்கள் அவர்களை அச்சுறுத்தவில்லை. ஆனால் இதுதான் உண்மை என்று டத்தோ தினகரன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset