நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்திய சமுதாயத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் சேர்க்கப்பட்டது: குணராஜ்

செந்தோசா:

இந்திய சமுதாயத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் சேர்க்கப்பட்டது.

செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் இதனை கூறினார்.

2026ஆம் ஆண்டு சுக்மா விளையாட்டு போட்டியை சிலாங்கூர் மாநிலம் ஏற்று நடத்தவுள்ளது.

இப்போட்டியில் ஆரம்பத்தில் சிலம்பம் இடம் பெறவில்லை.

இதனால் இந்திய சமுதாயத்திடம் இருந்து பல்வேறான அதிருப்திகள் வெளிப்பட்டன.

குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டை சுக்மாவில் சேர்க்க வேண்டும் என அவர்கள் குரல் கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் சிலம்பம் சுக்மாவில் சேர்ப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டது.

இதன் மூலம் சுக்மா விளையாட்டில் சிலம்பம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்திய சமுதாயத்தின் கோரிக்கைகளுக்கு ஏற்ப சிலம்பம் சுக்மாவில் இணைக்கப்பட்டுள்ளது.

இது சமுதாயத்தின் உரிமை குரலுக்கு கிடைத்த வெற்றியாகும்.

இவ்வேளையில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி, சிலாங்கூர் மாநில விளையாட்டுப் பிரிவு ஆட்சிக் குழு உறுப்பினர் நஜ்வான் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்..

குறிப்பாக இந்திய சமுதாயத்தின் குரலுக்கு மதிப்பளித்த அவர்களுக்கு நன்றி என்று குணராஜ் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset