
செய்திகள் மலேசியா
திருமண தொழில் துறையில் உள்ளவர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் டபள்யூபிஏஎம் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டது: வேதகுமார்
ஷாஆலம்:
இந்திய திருமண ஏற்பாடுகளை செய்யும் தொழில் துறையில் உள்ள அணைவரையும் ஒரே குடையின் கீழ் ஒன்றிணைக்கும் முயற்சியில் டபள்யூபிஏஎம் எனப்படும் மலேசிய திருமண நிபுணத்துவ ஏற்பாட்டாளர்கள் கூட்டமைப்பு அதிகாரப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
டபள்யூபிஏஎம் தலைவர் வேதகுமார் ராஜகோபால் தெரிவித்தார்.
இந்த அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று இரண்டாம் ஆண்டாக ஷாஆலம் டிஎஸ்ஆர் மாநாட்டு மண்டபத்தில் மாபெரும் ஒன்றுக்கூடல் விருந்து உபசரிப்பு சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இந்த தொழில் துறையை சார்ந்த 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது.
இந்திய திருமண தொழில் துறையை சார்ந்தவர்களின் நலனை காக்க இந்த அமைப்பு முதல் முறையாக அமைக்கப்பட்டுள்ளது.
புகைப்படக் கலைஞர்கள், திட்டமிடுபவர்கள், அலங்கார நிபுணர்கள், உணவு பரிமாறுபவர்கள், வடிவமைப்பாளர்கள், கலைஞர்கள், ஒப்பனையாளர்கள் உள்ளிட்ட திருமணத் துறையில் ஈடுபட்டுள்ள அனைவரையும் இந்த அமைப்பு ஒன்றிணைக்கிறது.
இந்த துறையை சார்ந்தவர்கள் எதிர்க்கொள்ளும் சவால்கள், பிரச்சினைகள் ஆகியவற்றை கலந்து பேசிய அதனை களைவதே இந்த அமைப்பின் முதல் நோக்கமாகும்.
மேலும் எங்களின் தேவைகளை அரசாங்கத்திடம் கேட்டு பெருவதற்கும் இந்த அமைப்பு உறுதுணையாக இருக்கும்.
அனைவரின் நலனை காக்க இந்த அமைப்பு பாடுபடும் என்று அவர் தெரிவித்தார்.
மேம்பாட்டு தொழில் முனைவோர் அமைச்சு மூலம் பல நல்ல திட்டங்களை முன்னெடுக்க இந்த அமைப்பு பாடுபடும்.
மேலும் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ ரமணன், அவரின் தனி சிறப்பு அதிகாரி டத்தோ அன்புமணி பாலன் ஆகியோரின் உதவியுடன் உறுப்பினர்களுக்கு தெங்குன் கடனுதவி பெற்று தர ஏற்பாடுகளை செய்வோம்.
திருமண ஏற்பாட்டுக்கான விலை கட்டுப்பாடு, சுற்றுலா விசாவில் வந்த இங்கு திருமண தொழில்துறையில் சம்பாதிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுப்பது போன்ற பல தரப்பட்ட விஷசங்களை தமது தரப்பு கண்காணிக்கும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2025, 10:24 pm
அடிமட்டத்தில் தேவைப்படும் இந்தியர்களுக்கு உதவ மித்ரா தவறிவிட்டது: கணபதிராவ்
August 12, 2025, 8:20 pm
ஸ்ரீ முருகன் மையத்தின் நிறுவனர் டான்ஸ்ரீ மு. தம்பிராஜாவிற்கு இரங்கல் கூட்டம்
August 12, 2025, 6:03 pm
வலிப்பால் இறந்த என மகனின் உடலில் ஏன் கடுமையான காயங்களும் இரத்தப்போக்கும் இருந்தது: தாயார் ஐயம்
August 12, 2025, 12:53 pm
2014 முதல் அரசு பல்கலைக்கழகங்களில் 31 பகடிவதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: ஜம்ரி
August 12, 2025, 12:52 pm
வங்காளதேச தொழிலாளர்களுக்கு பல நுழைவு விசா வசதிகள்: பிரதமர் அறிவிப்பு
August 12, 2025, 12:18 pm