நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கேஎல்ஐஏவில் 2,500 ஆமைகளுடன் இந்திய நாட்டவர் கைது செய்யப்பட்டார்

கோலாலம்பூர்:

கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 2,500 ஆமைகளுடன் இந்திய நாட்டவர் கைது செய்யப்பட்டார்.

மலேசிய எல்லைக் கட்டுப்பாடு, பாதுகாப்பு அமைப்பின் இயக்குநர் இப்ராஹிம் முகமது யூசோப் இதனை கூறினார்.

கடந்த செவ்வாய்க்கிழமை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் 2,500 சிவப்பு காதுகள் கொண்ட ஸ்லைடர் ஆமைகளுடன் இந்திய நாட்டவர் கைது செய்யப்பட்டார்.

சம்பந்தப்பட்ட ஆடவர் மலேசியாவில் உள்ள ஒரு உணவகத்தில் சமையல்காரராகப் பணியாற்றினார்.

சந்தேக நபர் வனவிலங்கு கடத்தல் கும்பலுக்காக செயல்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக அவர் கூறினார்.

41 வயதான சந்தேக நபர் டெர்மினல் 1 வழியாக பொருட்களை வெளியே எடுத்துச் செல்ல கும்பலால் பணியமர்த்தப்பட்டதாக சந்தேகிக்கப்படுவதாகவும்,

ஆனால் அதிகாரிகள் வெற்றிகரமாக அந்நடவடிக்கையை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

விசாரணையில் சந்தேக நபர் பொருட்களை உள்ளடக்கங்கள் தனக்குத் தெரியாது என்றும் பொருட்களை வேறொரு நபர் தன்னிடம் ஒப்படைத்ததாகவும் கூறினார்.

விமான டிக்கெட்டையும் மூன்றாம் தரப்பினர் வாங்கியதாக சந்தேக நபர் கூறியதாக அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

 

 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset